ரஜினி ஏன் இப்படிச் செய்தார்?
இன்று தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி விஷேசமோ அதேபோல் அம்பேத்கர் பிறந்தநாள் என்பதும் விஷேசம். மானுட விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய ஒரு அற்புதமானவர் அம்பேத்கர். அவரின் பெருமையை இன்று பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு வீட்டில் இருந்தபடியே பேசி வருகிறார்கள். கொரோனாத் தொற்றுக் காரணமாக கூட்டம் கூடவோ சிலைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று மாலை போடவோ அனுமதி இல்லை.
பிரமதர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அம்பேத்கரை நினைவு கூர்ந்தார். நடிகர் கமலும்,,அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செய்யும் மரியாதை உயர்வு தாழ்வை ஓடச் செய்வதே என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்வீட்டில் அம்பேத்கர் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. கமல் அரசியல்வாதியாக மாறி வருகிறார்..ரஜினி நடிகராகவே தொடர்கிறார் போல”