சீன் பை சீன் பிரம்மாண்டம்! : சுடச்சுட வெளியான ‘எந்திரன் – 2’ சீக்ரெட்ஸ்..!!
நேற்று ட்விட்டரில் ரஜினி ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக ‘எந்திரன்2’ டைட்டில் ட்ரெண்ட்டிங்கில் வந்து நின்று கொண்டிருந்தது.
ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் ‘எந்திரன் 2’ ஆரம்பிக்கப்பட்டு விட்டதா என்கிற ஆச்சரியம் எல்லோருக்குள்ளும் புகுந்து உற்சாகப்படுத்தியது. அந்தளவுக்கு ‘எந்திரன்2’ படம் பற்றிய தகவல்கள் ட்விட்டரில் அணிவகுத்து நின்றன.
அவைகளை படித்த எல்லோரும் இன்னொரு மிரட்டலான பிரம்மாண்டப்படம் ரஜினிகாந்த் – ஷங்கர் காம்பினேஷனில் வரப்போகிறது என்பதை மட்டும் உறுதியாக நம்பினார்கள்.
குறிப்பாக ‘எந்திரன் 2’ படத்த்தை முதல்முறையாக முழுப்படத்தையும் ‘3டி’ தொழில்நுட்பத்தில் ஷங்கர் எடுக்கப் போகிறார் என்பது தான் வெளியான தகவல்களில் எல்லோரையும் கவர்ந்த ஸ்பெஷலான செய்தி.
இதுவரை இந்தியாவில் தயாரான எல்லாப் படங்களையும் ‘2டி’ தொழில்நுட்ப கேமராவில் தான் படமாக்குவார்கள். அதன்பிறகு அதை ‘3டி’யாக கன்வெர்ட் செய்வார்கள். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை முழுப்படத்தையும் ‘3டி’ கேமராக்களால் படமாக்கப் போகிறார்களாம்.
படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் ஹூரோ அமீர்கான் முதல் நம்மூர் ஹீரோ கமல், விக்ரம் வரை கேட்டுப் பார்த்தும் எல்லோரும் ”ரஜினிக்கு வில்லனா? நோ நெவர்…” என்று மறுத்து விட்டார்கள். இப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அதோபோல படத்தில் தீபிகா படுகோனே தான் ஹீரோயின் என்று நம்பப்பட்டு வந்த சூழலில் இப்போது ஷங்கரின் ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்சன் தான் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.
படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரிப்பதால் எவ்வளவு பட்ஜெட்டையும் தாங்கக்கூடிய சக்தி அந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. ஆகையால் இதுவரை இந்தியாவில் ரிலீசான எல்லா பிரம்மாண்டப் படங்களையும் விட பிரமிக்க வைக்கும் படமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஷங்கர்.
ஆக ‘எந்திரன் 2’ கண்டிப்பாக ஷங்கரின் பிரம்மாண்டப் படங்களின் மைல்கல்லாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.