பிரைம் வீடியோவில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ஃபார்ஸி தொடர்!

Get real time updates directly on you device, subscribe now.

மிகப்பெரிய வெற்றி கண்டு சாதனை புரிந்த தி ஃபேமிலி மேன் ஐ உருவாக்கிய மிகப்பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் ஃபார்ஸி. திரைப்படம். ராஜ் & DK இன் தயாரிப்பு நிறுவனமான D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட, இந்த நட்சத்திரக்கூட்டம் நிறைந்த தொடரானது பாலிவுட்டின் மனம் கவர்ந்த ஷாஹித் கபூர் மற்றும் கோலிவுட்டின் மிகவும் அன்புக்குரிய நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்தைக் குறிக்கிறது.

Related Posts
1 of 10

இந்தத் தொடரில் ராஷி கண்ணா, தேர்ந்த கலைஞரான கே கே மேனன், திரைக்குத் மீண்டும் திரும்பும் மூத்த நடிகர் அமோல் பலேகர், ஆகியோருடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புதுமுக நடிகர் புவன் அரோராவும் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குனர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது. செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது . அவருக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான தொடர்ந்த முடிவற்ற இந்தப் போட்டியில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே யுடன் இணைந்து , ஃபார்ஸி ஐ எழுதியுள்ளனர்.