தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வரும் ‘ஃபாரின் சரக்கு’!

நெப்ட்டியூன் சய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் (Neptune Sailors Production) என்ற நிறுவனம் சார்பில் கோபிநாத் தயாரித்திருக்கும் இந்த படத்தை விக்னேஷ்வரன் கருப்புசாமி இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமியிடம் படம் குறித்து கேட்ட போது, “படிக்கும் காலத்தில் இருந்து சினிமா மீது மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. அதனால் தான் பல குறும்படங்களை எடுத்து வந்தேன்.
பிறகு கப்பல் பணியில் சேர்ந்த போது, அங்கே இருந்த சுந்தர் மற்றும் கோபிநாத் ஆகியோரும் என்னை போலவே சினிமா மீது ஆர்வமாக இருந்ததால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல குறும்படங்களை எடுத்தோம். ஒரு கட்டத்தில் குறும்படங்கள் எடுத்தது போதும், திரைப்படம் எடுக்கலாம் என்று மூன்று பேரும் முடிவு செய்தோம்.எங்கள் மூன்று பேருடைய முயற்சியில் உருவாகியிருக்கும் ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் பணிகள் நிறைவு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.