சீயோன் ராஜாவின் புதியபட அப்டேட்!

Get real time updates directly on you device, subscribe now.

 


இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது.

பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும்
சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், misunderstanding, comedy என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது.

சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என, ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது.

 

Related Posts
1 of 2,309

இப்படத்தின் முக்கிய கிரியேட்டிவ் கூட்டணியாக டாக்டர் எஸ். கார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சீயோன் ராஜா இணைந்துள்ளனர்.

 

கதையின் மையத்தையும் கதாபாத்திரங்களின் உலகத்தையும் உருவாக்கியிருக்கும் டாக்டர் எஸ். கார்த்திகேயனின் கதை மற்றும் வசனத்தை, சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்து, தனது இயக்குநர் பார்வையில் திரைக்கு கொண்டு வருகிறார் சீயோன் ராஜா.

 

இப்படத்தில் ரோஷன் மற்றும் சபரி கணேஷ் கதாநாயகர்களாகவும், அஸ்மிதா மற்றும் வர்ணா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

மேலும் ரமேஷ் கண்ணா கதாநாயகனின் தந்தையாகவும், சுஜாதா (பருத்திவீரன்) தாயாகவும் நடிக்கின்றனர்.