மீண்டும் இணையும் ‘வெர்ஜின்’ கூட்டணி : ஆனந்தி மட்டும் மிஸ்ஸிங்!

Get real time updates directly on you device, subscribe now.

gv-1

ஜி.வி.பிரகாஷூக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’.

படம் வசூலில் சக்கை போடு போட்டாலும் படத்தைப் பார்த்த எல்லோருமே ஜி.வி பிரகாஷ் ஒரு ‘பிட்டு பட நாயகன்’ ரேஞ்சில் தான் நடித்திருக்கிறார் என்று கமெண்ட் செய்தார்கள்.

ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் என இரண்டு நாயகிகளில் உச்சபட்ச கவர்ச்சியான காட்சிகளுன் வெளியானதே இந்தப்படம் இளைஞர்கள் மத்தியின் வரவேற்பு பெறக்காரணம்.

படம் ரிலீசாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதால் ‘இனி இந்த மாதிரியான படத்தில் நான் நடிக்கப் போவதில்லை’ என்று ஜி.வி அறிவித்து விட்டார்.

Related Posts
1 of 8

ஆனால் இப்போது மீண்டும் அதே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் புதிய படத்தில் அவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

இப்படத்தை ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஸ்டீஃபன் தயாரிக்கிறார். படத்திற்கான டைட்டில் மற்றும் கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. முந்தைய படத்தில் தன்னை மிக அசிங்கமாக காட்டி விட்டார் இனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று மீடியாக்களிடம் புலம்பியிருந்தார் ஆனந்தி. ஆக ஆனந்தி இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பென்சில்’ ரசிகர்களிட்ம் பரவலான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன அசராதவன்’ என்ற படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, ஜி.வி.யும், ஆதிக்கும் மீண்டும் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது.

அப்போ இது இன்னொரு ‘வெர்ஜின்’ படமா..?