நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், ‘ப்ரீ விஷன்’ எனப்படும் முன்னோட்ட பார்வைக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் நாயகன் சேஷ், சம்பிரதாயமான உடையில் மிடுக்காகவும், ஸ்டைலாகவும் தோன்றி உயர்ந்த கட்டிடத்திலிருந்து கீழே விழும்போது துப்பாக்கியால் சுடுவதை காணலாம். இந்த காட்சிக்காக நடிகர் தன் உடலை வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.
தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் நடிகர் அடிவி சேஷ் கதை எழுதி, கதையின் நாயகனாக நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட பார்வையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார்.