கங்குவா- விமர்சனம்
தமிழ்சினிமாவில் நிகழ்ந்த மற்றொரு பிரம்மாண்ட பிழை இந்த கங்குவா
1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் உள்ளும் புறமுமில்லாத ஒரு பகுதிக்குள் சூர்யா, தன் இன மக்களோடு வாழ்ந்து வருகிறார். அவர்கள் வாழும் நிலம் குறி வைக்கப்படுகிறது. அதை எதிர்த்து சூர்யா நடத்தும் போராட்டத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு வந்துவிடுகிறது. அதே பொறுப்பு 2024-ல் ஜாலியாக வாழ்வை நடத்தி வரும் இன்னொரு சூர்யாவிற்கும் வருகிறது. அப்படியான பொறுப்பு என்ன? என்பதும், அதைச் சூர்யா எப்படி காப்பாற்றினார்? என்பதுமே படத்தின் கதையாக விரிகிறது
சூர்யா நெருப்பு போல படத்தில் தகதகவென இருக்கிறார். சில இடங்களில் ஓவராக கத்துகிறார். ஹரி படங்களில் கூட அவர் இவ்வளவு கத்தியதில்லை. அவரைத் தவிர்த்து யாரும் படத்தில் உருப்படியாக நடித்தது போலில்லை
வெற்றியின் விஷுவல்ஸ் எல்லாம் வேறலெவலில் அமைந்துள்ளது. அவரது ப்ரேமிங் எல்லாமே பிரம்மாண்ட மேஜிக். DSP பின்னணி இசையால் நம் காதைப் பிளந்துவிடுகிறார். படம் மீது நிறைய நெகட்டிவ் ரிவ்யூஸ் வருவதற்கு பின்னணி இசையும் பெருங்காரணம்
இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டிய படம். கதை திரைக்கதை இரண்டுமே படு வீக்-ஆக அமைந்துள்ளதால் கங்குவா, பிரம்மாண்டம் இருந்தும், பிரமாதப்படுத்தாமல் பரிதாபமாக படுத்துவிட்டது
2/5