உசுரக் கொடுத்து நடிச்சு என்ன புண்ணியம்? : விரக்தியில் வரலட்சுமி
இது பாலா படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கே கிடைக்கும் மிகப்பெரிய சாபக்கேடு போலிருக்கிறது!
பாலாவை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் உசுரைக் கொடுத்து நடித்த நடிகைகள் கூட அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பெரிதாக கல்லா கட்டியதாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை.
அப்படிப்பட்ட நடிகைகள் லிஸ்ட்டில் தான் சேர்ந்திருக்கிறார் ‘தாரை தப்பட்டை’யில் உயிர்ப்புள்ள நடிப்பை கொடுத்த வரலட்சுமி.
அதில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அப்படி இருந்தும் தமிழில் புதுப்பட வாய்ப்புகள் வரவில்லை. தமிழ் கை விட்டால் என்ன? அண்டை மாநிலமான கேரளாவில் அவருடைய நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குநர் நிதின் பனிக்கர் தன்னுடைய புதுப்படத்தில் நடிப்பதற்காக வரலட்சுமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக முதலில் தபுவைத்தான் நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருந்தாராம் பனிக்கர். ஆனால் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து பிடித்துப் போய் தபுவை கழற்றி விட்டுவிட்டு வரலட்சுமியை கமிட் செய்திருக்கிறார்.
தமிழில் சுத்தமாக படமில்லாத வரலட்சுமிக்கு ஏற்கனவே நடித்து கிடப்பில் கிடந்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அந்தப்படமாவது தமிழில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை வாங்கித் தருமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.