கார்கி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தந்தை மீதான கலங்கத்தை துடைக்கப் புறப்படும் ஒரு மகளின் கதை

பள்ளி ஆசிரியையான மிடில் க்ளாஸ் குடும்பத்தில் வாழும் சாய்பல்லவிக்கு அப்பா என்றால் அப்படிப்பிடிக்கும். செக்ரியூட்டியாக வேலை சாய்பல்லவியின் அப்பா சிவாஜீ மீது ஓர் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. அந்தக் குற்றத்திற்கும் அப்பாவிற்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கப் போராடும் சாய்பல்லவிக்கு சமூகமும், சட்டமும், சூழலும், உண்மையும் என்ன முடிவை கொடுத்தது என்பதே கார்கியின் கதை

தன் திறமைக்கேற்ற கதையை தேர்வுசெய்து, கதைக்கு 100% உழைப்பைக் கொடுத்து நடிப்பில் வியக்க வைத்திருக்கிறார் சாய்பல்லவி. அவருக்குப் பக்கபலமான கேரக்டரில் காளிவெங்கட் வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பில் துளியும் மிகையுணர்வு இல்லை. சிவாஜீ தன் கேரக்டருக்கு வெறும் கண்களாலே உயிர் கொடுத்துள்ளார். திருநங்கை நீதிபதியாக நடித்துள்ள சுதா..இனி சதா பேசப்படுவார். அவ்வளவு நல்ல நடிப்பு. வெகு நாட்களுக்குப் பிறகு சரவணன் மிக நேர்த்தியான கேரக்டரில் மிளிர்ந்திருக்கிறார்

நடித்தவர்கள் இப்படி கலக்குகிறார்கள் என்றால் டெக்னிஷியன்ஸும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படம் முடிந்தபின்னும் நம்மை ஈர்க்கிறது. ஒளிப்பதிவும் ஓர் வாழ்வியல் படத்தை நம் கண்முன் நிறுத்துகிறது

படத்தின் திரைக்கதையும் வசனங்களும் பெரும்பலம். நாம் யூகிக்க முடியாத காட்சிகள்& ட்விஸ்ட்கள், நாம் யோசித்தேயிராத வசனங்கள் என இயக்குநர் கெளதம் ஒரு தேர்ந்த படைப்பாளியாக இப்படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்ற இப்போதைய முழக்கத்திற்கு உயிர் கொடுக்கிறது இந்த கார்கி
4/5