அடுத்த படமும் சிறுத்தை சிவா! : கையெடுத்து கும்பிடும் அஜித் ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

ajith

னக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவரைத் தவிர மற்றவர்களிடம் அவ்வளவு சீக்கிரத்தில் நெருங்க மாட்டார் அஜித்.

அப்படித்தான் ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து ‘விவேகம்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கே கொடுத்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் மிக அதிகப் பொருட்செலவில் தயாரித்த இந்தப்படம் விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது. ரசிகர்கள் 100 கோடி, 200 கோடி என்று வசூல் விபரத்தை பரப்பி விட்டாலும் உண்மை வசூல் நிலவரத்தை தயாரிப்பு தரப்பு இதுநாள் வரை வெளியிடவில்லை. அதற்கு காரணம் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதே உண்மை என்கிறார்கள்.

விவேகம் தோல்விப்படம் என்கிற செய்தி எல்லா இடங்களிலும் பரவியதால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகி விட்டனர். அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா தான் என்று அவரை கடுமையாக சாடினர்.

இதனால் தல யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது விஷ்ணு வர்தன் தான் இயக்க வேண்டும் என்றும் அவர்கள் சமூகவலைத்தளங்கள் மூலமாக அஜித்துக்கு கோரிக்கை வைத்தனர்.

Related Posts
1 of 68

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியாகியிருக்கும் செய்தி அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் கவலை தரும் செய்தியாக வந்திருக்கிறது.

ஆமாம், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் சிறுத்தை சிவாவுக்கே கொடுப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அஜித்.

மீண்டும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்க இருக்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 பிப்ரவரியில் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே விவேகம் படத்தால் தல பெயர் கெட்டுக் கிடக்கிறது. அதற்கு காரணம் இயக்குநர் சிவா தான். அப்படிப்பட்டவருக்கே மறுபடியும் வாய்ப்பா? வேண்டாம் தல என்று அவர்கள் அஜித்தை கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

முடிவு செய்து விட்டால் தன் பேச்சை தானே கேட்க மாட்டார் அஜித். ரசிகர்கள் சொல்வதை மட்டும் கேட்டு விடுவாரா என்ன?