”நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்!

Get real time updates directly on you device, subscribe now.

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து ‘நீ சுடத்தான் வந்தியா’என்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘ உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கைத்துறையின் ‘ ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதை தணிக்கை செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுப்பவே, அங்கும் ஒரு முடிவு எட்டப்படாமல் எட்டுப்பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.ஒருவழியாக ‘ஏ’ சான்றிதழ் பெற்று விட்ட இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.