இது என் அப்பாவின் கனவு : இயக்குநர் ஆனது பற்றி காயத்ரி ரகுராம் உருக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

gayathri1

மிழ் சினிமாவில் பெண்களுக்கான படங்கள் ஒரு சில தான் வருகின்றன. அந்த வகையில் திரைப்படத் துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின்
வாழ்க்கையை சில உண்மை சம்பவங்களை வைத்து விரைவில் வெளிவர காத்திருக்கும் படம் தான் ”யாதுமாகி நின்றாய்”.

பிரபல நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி ரகுராம் அவர்கள் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் இப்படத்தைப் பற்றிப் பேசியவர் இது என் அப்பாவின் கனவு என்று உருக்கமாகக் கூறினார்.

இப்படம் திரைப்படத் துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின் சில உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டது. பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொறு கட்டத்தையும் அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற ஒரு சமூக கருத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். குறைந்த செலவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கவர்ச்சி என்பது துளி கூட இல்லை. இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள், இதில் ‘புடவை நிலவே’ பாடலை நடிகர் தனுஷ் கேட்டவுடன் பாடிக்கொடுத்தார்.

நான் இயக்குநராக வேண்டும் என்பது என்னுடைய அப்பாவின் கனவு. அந்தக் கனவு நிறைவேறியிருப்பதாகவே கருதுகிறேன். என்று சொன்ன காயத்ரி ரகுராம் தலைவா படத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராக வேலை செய்தவர். அதற்காகவே தனது இந்த முதல் படத்தை நான் என்னுடைய குருநாதர் இயக்குனர் திரு ஏ.எல்.விஜய் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பெருமை பொங்கக் கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடன இயக்குனர் கலா மாஸ்டர் ”சினிமாவில் பெண்களுக்கான படங்கள் குறைவாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படம் பெண்களுக்கு பெருமையை சேர்க்கும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள்,பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையை நாமே பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இப்படம் பெண்களுக்கான ஒரு அழகான திரைப்படம், இதை தவிர இப்படத்தில் என் கணவரும் நடித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இயக்குனராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இப்படம் பார்ப்பவர்களை இது ஒரு அருமையான கதை என்று சொல்ல வைக்கும்” என்று காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.