நான்கு கதாநாயகிகளுடன் டூயட்! : நிறைவேறியது அதர்வாவின் நீண்டநாள் ஆசை

Get real time updates directly on you device, subscribe now.

gemini2

ந்த ஒரு ஹீரோவுமே விதவிதமான கேரக்டர்களில் நடிக்கத் தான் ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரியான கேரக்டர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அமைந்து விடுவதில்லை.

புதிய முயற்சிகளுக்கு தன்னை அர்ப்பணிக்கக்கூடிய அப்படிப்பட்ட ஒரு சில ஹீரோக்களில் நடிகர் அதர்வாவும் ஒருவர். பாலாவின் பரதேசி படமே கேரக்டருக்காக அவர் எந்தளவுக்கு தன்னை வருத்திக் கொள்வார் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

இருந்தாலும் ரொமான்ஸ் வித் காமெடி என்பது தான் கமர்ஷியல் ஹிட்டுக்கு முதல்படியாகும். அதர்வா இதுவரை நடித்த படங்களில் கதையோடு கலந்த ரொமான்ஸ் மட்டுமே இருந்தது. காமெடி கலந்த கமர்ஷியல் படமாக அவரது படங்கள் இருந்ததில்லை.

ஒரு படமாவது அப்படி ரொமான்ஸ் – வித் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக நடிக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக தயாராகியிருக்கும் படம் தான்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் ”ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்” திரைப்படம்.

Related Posts
1 of 24

அம்மா கிரியேஷனின் சில்வர் ஜூப்லி திரைப்படமான இப்படத்தை ஓடம் இளவரசு இயக்கியிருக்கிறார். இதில் ஒன்றல்ல, இரண்டல்ல அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, அதீதி போஹங்கர் என நான்கு கதாநாயகிகள் படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். கதைக்கு நான்கு கதாநாயகிகள் தேவைப்பட்டதால் நான்கு பேரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பொறுத்தவரை இவர்தான் கதாநாயகன், இவர்தான் காமெடியன், இவர்தான் ஹீரோயின் என்று எதுவும் கிடையாது.

திரைக்கதையில் ஒவ்வொருவரின் பகுதியும் சுவாரஷ்யமாக இருக்கும். முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களோடு நான் கடவுள் ராஜேந்திரன், டி.சிவா, மயில்சாமி, சோனியா போஸ் வெங்கட், பிக் பிரிண்ட் கார்த்திகேயன், தீனா, லோகேஷ் & கோபி, ஐஸ்வர்யா பழனி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களோடு சிறப்பு தோற்றத்தில் நேகா மாலிக் ஆகியோரும் நடித்துள்ளார்.

ரொமாண்டிக் – காமெடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அதர்வாவின் நீண்டநாள் ஆசை. அது இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது என்கிறார் இயக்குநர் ஓடம் இளவரசு.