லாரன்ஸின் புதிய திட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் லாரன்ஸ் கொரோனா பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு பேருதவி புரியும் விதமாக தாய் என்ற குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக அவரது சினிமா நண்பர்களிடம் அரிசி சேகரித்து வருகிறார். அவருக்கு ரஜினிகாந்த் 100 மூட்டை அரிசி வழங்கினார். அதைத்தொடர்ந்து நடிகர் ரா.பார்த்திபன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு லாரன்ஸ் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதோடு 100 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார்.

“சினிமாவில் சம்பாதித்த பணத்தை முக்கால் வாசிக்கும் மேல் மக்களுக்கு நல்லது செய்ய செலவழித்து வருகிறார் லாரன்ஸ். அவருக்கு நண்பராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஒருவரால் மட்டும் எல்லாருக்கும் செய்ய முடியாது. அதனால் நம் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவோம்” என்றும் பார்த்திபன் கூறி இருக்கிறார்

Related Posts
1 of 11

இதுகுறித்து நடிகர் லாரன்ஸ்,

எனது தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைக் கூறிய பார்த்திபன் சாருக்கு எனது பெரிய நன்றி. உங்கள் வீடியோவைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிக சந்தோசமாக இருக்கிறோம். எனது கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு, கொரோனா நிவாரணத்திற்காக 1000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியதற்கும் நன்றி.

உங்களின் பங்களிப்பை எங்கள் தாய் என்ற குழு பசியால் பாதிக்கப்பட்டுள்ள சரியான மக்களுக்கு விநியோகிக்கும், மேலும் விவரங்களை விரைவில் உங்களுக்கு தெரிவிப்போம். உங்களுக்கு பெரிய இதயம் இருக்கிறது, மேலும் பல இடங்களிலும் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் நண்பராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார். மேலும்
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு யாராவது பார்த்திபன் சார் போல முன்வந்து உதவி செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்: 877-8338209. ஒருகிலோ அரிசி கூட ஒருசிலரின் பசியை நிரப்பும்” என்றும் லாரன்ஸ் கூறியுள்ளார்.