நீங்களும் போடுங்களேன் ‘மார்க்’ : வருகிறார் கலா மாஸ்டர் ஃபேமிலி ஹீரோ!

Get real time updates directly on you device, subscribe now.

Gugan

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் புதிதாக வரும் நடனப்புயல்களுக்கு மார்க் போட்டு சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான டான்ஸ் மாஸ்டர் கலாவின் குடும்பத்திலிருந்து ஒரு ஹீரோ தமிழ்சினிமாவில் அறிமுகமாகிறார்.

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர்.

“வண்ணத்துப்பூச்சி” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து கலகலப்பாக எடுக்கப்பட்ட படம் தான் “குகன்”.

இதில் தான் கதாநாயகனாக அறிமுகமாகிறார் டான்ஸ் மாஸ்டர் ரகுராம், கலா குடும்பத்திலிருந்து வந்திருக்கும் அரவிந்த் கலாதர். டான்ஸ் மாஸ்டர் குடும்பம் என்றால் நடனத்தைப் பற்றி கேட்க வேண்டுமா என்ன? ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே படத்தில் இவர் நடனத்தில் அசத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த நேத்ரா என்கிற சுஷ்மா அறிமுகமாகியுள்ளார்.

இவர்களின் யதார்த்தமான காதல் பின்னணியில் இன்றைய முக்கியத் தேவையான இயற்கை விவசாயத்தின் அவசியத்தை கதைக்களமாக சொல்லியுள்ளார் இயக்குநர். இதற்காகவே இயற்கை விவசாயத்தை தனது மூச்சாகக் கொண்டுள்ள திருநெல்வேலி ராஜா அய்யா அவர்களின் நூறு ஏக்கரில் அமைந்துள்ள இடத்திலும், இயற்கை சூழல் கொண்ட சிங்கத்தாகுறிச்சி என்ற இடத்திலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

மோகனப்பிரியா, ஒவியர் அரஸ் இருவரும் கதாநாயகனின் பெற்றோராக நடித்துள்ளனர்.

வாலிப வயதில் உள்ள பிள்ளைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் தன் உணர்வுகள், ஆசைகளை எடுத்துச் சொல்ல முற்படுவதும், அதை புரிந்து கொள்ளாத பெற்றோர் பிள்ளைகளை ரோட்டில் புரட்டி, புரட்டி போட்டு அடித்து துரத்துவதும் இன்றைய நிலைமை. இதிலிருந்து விடுபட்டு ஒடுகிற கதாநாயகனை கிராமம் அரவணைக்கிறது. அவனது திறமையை மதித்து கொண்டாடுகிறது. காதலும் அப்படியே ஊடாடி வர கதாநாயகன் இறுதியில் பெற்றோரிடம் செல்கிறானா, இல்லையா என்பதே படத்தின் கிளைமேக்ஸாம்.

சென்சார் அதிகாரிகளின் பாராட்டுப் பெற்று, வரிச்சலுகையும் பெற்று மக்களை சந்திக்க ஏப்ரல் 22 க்கு திரைக்கு வருகிறது “குகன்”.