‘ஹனு- மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’பாடல் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் இடம்பெற்ற ஹனுமான் சாலிசா எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும், காணொளியும் வெளியாகி இருக்கிறது.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் ‘ஹனு-மேன்’ எனும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அனுமான் சாலிசா..’ எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. துளசிதாஸ் எழுதிய இந்தப் பாடலை பின்னணி பாடகர்கள் சாய்சரண் பாஸ்கரூனி பாடி இருக்கிறார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் கௌரஹரி இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலில் அனுமானின் ஆற்றல், பக்தி ததும்ப இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் அனுமனின் வீரத்தை சித்தரிக்கும் கலைப்படைப்பு என்பதால், பார்வையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts
1 of 4

படைப்புத்திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மேன்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணலா கிஷோர், கெட்டப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், மாண்டரின், ஜப்பானீஸ் ஆகிய சர்வதேச மொழிகளிலும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.