திறமையான நடிகை தான்.. – ஆனா என்ன பண்றது ஒருத்தரும் கண்டுக்கலியே?

தமிழ்சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தனது திறமையான நடிப்பால் காலப்போக்கில் முழு நேர நடிகையாகி விட்டார்.
சமீபத்தில் வெளியான ‘தரமணி’, ‘அவள்’ இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்தவருக்கு அவர் எதிர்ப்பார்த்தபடி புதிய படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை!
இதனால் அண்மைக்காலமாக ஜவுளி, நகைக்கடைகள் திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள், கலை நிகழ்ச்சிகள் என எந்த பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வரும் அழைப்புகளுக்கு உடனே ஓகே சொல்லி விடுகிறாராம்.
இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட ஒரு பிரபலமான துணிக்கடையின் புதிய கிளை சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த கடை திறந்து வைக்க ஆண்ட்ரியாவுக்கு அந்தக் கடை சார்பில் 3 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர் கலந்து கொண்ட ஒரு நேரத்துக்குத் தானாம்!
தற்சமயம் ‘விஸ்வரூபம் 2’, ‘வட சென்னை’ என ஏற்கனவே கமிட்டான படங்கள் மட்டுமே ஆண்ட்ரியா கைவசம் உள்ளது.