ஹீரோ-விமர்சனம்

RATING : 2.5/5
இங்குள்ள மிகச்சுமாரான கல்வி சிஸ்டத்தை மாற்றுவதற்கு சூப்பர் ஹீரோவால் தான் முடியும் என்பதையும் தனியாகச் சிந்திக்கும் அனைவரும் சூப்பர் ஹீரோ தான் என்பதையும் சொல்கிறது ஹீரோ திரைப்படம்.
மார்க்ஷீட்டைப் பார்ப்பதை விட மாணவச்செல்வங்களின் ரப் நோட்டைப் பார்த்தால் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது தெரியும். அதை ஊக்குவித்தால் நம் தேசம் விரியும் என்ற படத்தின் அட்வைஸ் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை லாஜிக் மிஸ்டேக் இல்லாத திரைக்கதையாக மாற்றுவதில் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குநர் மித்ரன்.
ஒரு படத்தைப் பொறுத்த வரை ஆடியன்ஸ் பாலோ செய்வது கேரக்டரைத் தான். ஹீரோவில் ஹீரோவுக்கு வெறும் மாஸ்க் மட்டும் தான் இருக்கிறது மாஸே இல்லை. சிவகார்த்திகேயன் செய்யும் எந்த விசயமும் பெரிதாக மனதில் நிற்கவேயில்லை. அதற்கான காரணம் சிவகார்த்திகேயன் கேரக்டர் ஸ்கெட்ச் அவ்வளவு வீக்காக இருக்கிறது. அர்ஜுனுக்கான கேரக்டர் வார்ப்பு செம்ம ஷார்ப்பாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் என்ன செய்தாலும் அதற்கு பின்னால் அர்ஜுன் தான் இருக்கிறார் என்பதால் படத்தின் ஹீரோ டோன் அர்ஜுன் மேல் தான் விழுகிறது. ரோபோ சங்கரின் சிரிப்பு வராத காமெடியும், ஹீரோயினை வேஸ்ட் செய்திருப்பதும் நம்மை கடுப்படிக்கும் விசயங்கள்.
படத்தில் விஷுவல்ஸ் எல்லாம் உலகத்தரம். டெக்னிக்கல் ஏரியாவில் மிரட்டி இருக்கிறார்கள். மேக்கிங்கும் சூப்பர். பட் அடிநாதமான திரைக்கதை படு சொதப்பலாக இருப்பதால் ஹீரோவில் நிறைய சிஸ்டம் சரியில்லை.
நோக்கம் நல்லாருக்கப்பு… ஆனா ஆக்கம் சரியில்லையே