நயன்தாரா- கவின் நடிக்கும் ‘ஹாய்’ !

Get real time updates directly on you device, subscribe now.

நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார்.

Related Posts
1 of 15

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்.. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கன்னக் குழியா..’ என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ஏறத்தாழ மூன்று மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில்.. தற்போது ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை படத்தின் இயக்குனர் விஷ்ணு எடவன் எழுத அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை பிருந்தா மாஸ்டர் வடிவமைத்திருக்கிறார். ஜென் மார்ட்டினின் மெலோடியான மெட்டு- ‘ரசகுல்லா’ என்ற இனிப்பான சொல்- கலர்ஃபுல்லான நயன்தாரா – கம்பீரமான கவின்- இருவரது ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி- பிருந்தா மாஸ்டரின் நேர்த்தியான கலாச்சார நடன பின்னணி- ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் இடம் பிடித்திருப்பதால், இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது