Hit list- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கருத்துச் சொல்லும் கமர்சியல் சினிமா இந்த ஹிட்லிஸ்ட்

ஹீரோ விஜய் கனிஷ்காவின் அம்மா சித்தாராவும், தங்கை அபியும் கடத்தப்படுகிறார்கள்..கடத்திச் சென்ற தரப்பிடம் இருந்து ஹீரோவுக்கு ஒரு கோரிக்கை வருகிறது..அந்த கோரிக்கை என்ன? ஹீரோ எடுக்கும் முடிவுகள் எப்படியான விளைவுகளை தந்தது? என்பதே படத்தின் கதை

படத்தின் முதன்மை நாயகனாக நடித்துள்ளார் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. நிச்சயமாக அவருக்கு இன்னும் நடிப்பில் பயிற்சி தேவை. சரத்குமார் உதவி கமிஷ்னராக கம்பீரம் காட்டுகிறார். ‘நட்புக்காக’ அவர் செய்திருக்கும் இந்த ரோல் பாராட்டத்தக்கது. ஸ்மிருதி வெங்கட், சித்தாரா, அபி மூவரும் எமோஷ்னல் ஏரியாவை சிறப்பாக கையாண்டுள்ளனர். கெளதம் மெனென் சற்று டெரர் காட்டுகிறார். ஆனால் அவரது ஒரே மாடுலேசன் போர் அடிக்கிறது. சமுத்திரக்கனி சற்று நேரமே வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். பால சரவணன், முனிஷ்காந்த், கிங்க்ஸ்ட்லி, லதாராவ் என நிறைய நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர்

படத்தின் இசை அமைப்பாளர் இயக்குநர்கள் இருவர் எழுதிய சீன்களை விட அதிகமாக இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார்

படத்தின் ஜீவனே ப்ளாஸ்பேக்கில் வரும் காட்சிகள் தான். அதைச் சரியாக அமைத்துள்ளனர். மற்றபடி படமெங்கும் நாடகத்தன்மை எட்டிப்பார்க்கிறது. லாஜிக் என்பதை மறந்தே விட்டார்கள் போல. படம் சொல்லும் மெசேஜ் முக்கியமானதாக இருந்தாலும், சொல்லும் விதம் சோதிக்கிறது. ஹிட் லிஸ்ட் ஹிட் லிஸ்டில் வரவில்லை
2.25/5