ஹாட்ஸ்பாட் 2மச்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

அதே டெய்லர் அதே சட்டை என்பது போலவே இந்த பார்ட்2வும் பயணிக்கிறது

முதல் பாகத்தில் ஒரு உதவி இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருவார். அவர் சொல்லும் கதைகள் படமாக விரியும். இதிலும் அதையே தொடர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். பிரியா பவானிசங்கர் ஒரு தயாரிப்பாளரிடம் கதைகள் சொல்லச் சொல்ல நமக்கு அவை காட்சிகளாக விரிகிறது

ஒன்றாம் கதை
விஜய் அஜித் ரசிகர்களின்வெறியை மனதில் வைத்து இக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். அதாகப்பட்டது விஜய் அஜித் ரசிகர்களின் குடும்பத்தை கடத்திவிடுகிறார் ஒரு ஆசாமி. அவரின் மிரட்டலும் டிமாண்டும் மிக வித்தியாசமாக உள்ளது

இரண்டாம் கதை
மகளின் பர்த்டே பார்ட்டிக்கு தந்தையானவர் ஆகச்சிறந்த ஆடை ஒன்றை அணிந்து வந்ததாக நினைத்து ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். அந்த அதிர்ச்சியின் பின்னணி தான் கதை

மூன்றாம் கதை
2025-ல் வாழும் இளைஞன், 2050-ல் வாழும் பெண்ணை காதலிக்கிறான். அந்தக் காதலின் விளைவுகளே இந்தக் கதை

எம்.எஸ்.பாஸ்கரில் துவங்கி அஸ்வின் வரை அனைவருமே கதையில் போக்கை உணர்ந்து நடித்துள்ளனர். எம்.எஸ் பாஸ்கர் வேறலெவலில் அசத்தியுள்ளார். அஸ்வின் எபிசோடில் காமெடி தெறிக்கிறது. அவரும் பின்னியுள்ளார். ரக்‌ஷன், பிரியா பவானிசங்கர், பிரிகிடா சகா, பவானி ஸ்ரீ, குறிப்பாக தம்பி ராமையா ஆகியோர் நடிப்பால் நல்ல சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர்

ஜெகதீஸ் ரவி சரியான ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். குட்டிக் குட்டி ஷாட்களும் ரசிக்க வைக்கிறது. சதிஷ் ரகுநாதனின் இசையில் ஓரளவு எனர்ஜி இருக்கிறது

கதைக்கான களங்கள் இன்ட்ரெஸ்டிங்காக இருந்தாலும்,திரைக்கதை முதல்பாகம் அளவிற்கு வாவ் ரகமாகயில்லை. இன்னும் நன்றாக மெனக்கெட்டிருக்கலாம். உங்களுக்கு வோன்டைம் நிறைய இருந்தால் ஒன்டைம் பார்க்கலாம்
2.75/5