ஆஹான்னு சொல்ல வைக்கும் Aha OTT!
வெள்ளித்திரையில் படம் பார்த்த தலைமுறைகள் இருக்கும் போதே இல்லத்திரையில் படம் பார்க்கும் கலாச்சாரம் வந்துவிட்டது. இன்று ஓடி ஓடி படம் பார்ப்பவர்களை விட வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். இச்சூழலில் முழுக்க முழுக்க தமிழ் எண்டெர்மெயிண்ட்க்காக Aha OTT களம் இறங்கியிருக்கிறது..
மிகச்சிறப்பான கன்டென்ட்-களுடன் வரும் படங்களுக்கு Aha OTT மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தை வாங்கியிருக்கும் ஆஹா ஓடிடி தொடர்ந்து பல தரமான படங்களை நேரடியாக தயாரிக்கவும் இருக்கிறது. இந்த ஆஹா ஓடிடி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி அடைந்து வரும் நிலையில் தற்போது தமிழிலும் அசத்த வந்திருக்கிறது. Aha தமிழ் எண்டெர்டெயின்மெண்ட்- ன் துவக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றார்கள்.