விஷால் மிரட்டுகிறார் – ‘லீக்’ புகழ் ஸ்ரீ ரெட்டி புகார்!
வாய்ப்பு தருவதாக கூறி புதுமுக நடிகைகளை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டனர் என்று டோலிவுட் திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி அதிர்ச்சி கொடுத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
வெறும் குற்றச்சாட்டுகளை கூறியதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் தெலுங்கு திரையுலகமே ஆடிப்போயிருக்கும் சூழலில் கடந்த சில நாட்களாக ஸ்ரீ ரெட்டியின் கோபப்பார்வை கோலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது.
அவருடைய முதல் புகார் சென்னை ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல இயக்குநர் முருகதாஸ் மீது விழுந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து தமிழ்த் திரையுலகினர் வெளியே வருவதற்குள் அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது அசிங்கமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாகத் தெரிவித்திருந்தார்.
இப்படி தினமும் ஒரு தமிழ்த்திரையுலக பிரபலத்தை தனது முக நூலில் அம்பலப்படுத்தி வருவதால் ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகமும் ராத்தூக்கத்தை தொலைத்திருக்கிறது.
இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாக தனது முகநூலில் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
” நடிகர் விஷால் ரெட்டி தன்னை மிரட்டுவதாகவும், அவருடைய மிரட்டல்களுக்கு தான் பயப்படப்போவதில்லை என்றும், கோலிவுட் சினிமாவின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் எத்தனை பேர் தலைகள் உருளப்போகுதோ?