துல்கர் சல்மான் படப்பிடிப்பு தளத்தில் மம்மூட்டி !

Get real time updates directly on you device, subscribe now.

துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.  படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் எழுதுகின்றனர்.

Related Posts
1 of 4

இதற்கு முன்பு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் அறிமுகமான, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர்-இயக்குநர் மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த பிக்பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லரின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கிறார்கள். கபாலி, KGF தொடர், கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. *‘RDX’*க்கு பிறகு, நஹாஸ் ஹிதாயத்துடன் அன்பறிவ் குழு மீண்டும் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.