கொம்புசீவி- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

விஜயகாந்த் மகன் என்ற அடையாளம் மட்டுமே வெற்றியைக் கொடுக்காது சண்முகபாண்டியன் ப்ரோ? விமர்சனத்திற்கு முன்பே இதைச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது

வைகை அணை என்பது நிறைய மக்களின் வாழ்க்கை ஊற்று. அதேநேரம் அந்த அணை கட்டும் புராசஸில் அதில் புதையுண்ட வீடுகளும் குடும்பங்களும் உண்டு. அதில் ஒருகுடும்பம் தான் சண்முக பாண்டியன் குடும்பம். அப்பா அம்மாவை இழந்து நிற்கும் அவரை வளர்த்து ஆளாக்குகிறார் சரத்குமார். 20 ஆண்டுகள் கழித்தபின் இருவரும் கஞ்சா கடத்தல் செய்கிறார்கள்..அதனால் அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை

விஜயகாந்த் என்ற பெயரும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பும், படத்தில் ஆங்காங்கே வரும் அவரது ரெபரன்ஸும் மட்டுமே சண்முகபாண்டியனை வளர்த்து விடாது. ஏனென்றால் விஜயகாந்த் யாரின் பெயரையும் யூஸ் பண்ணி தன்னை நிரூபிக்கவில்லை. அதனால் இனி சண்முகபாண்டியன் விஜயகாந்தின் நிழலைத் துறந்து நடிக்க வேண்டும். இப்படத்திலும் அவரது நடிப்பு பத்தவில்லை. சரத்குமார் அசத்தியுள்ளார். தாரணிகா, முனிஷ்காந்த், காளிவெங்கட், கல்கி ஆகியோரெல்லாம் ஒகே

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஒகே ரகம். பின்னணி இசை பரவாயில்லை..அவ்வளவே

வலி மிகுந்த வரலாற்றை காமெடியாக சித்தரித்ததிலே ஒரு ரைட்டராக பொன்ராம் தன் வலிமையை இழந்துவிட்டார். மேக்கிங்கிலும், வசனங்களிலும் ஏகத்துக்கும் பழைய வாடை. மேலும் விஜயகாந்த் போன்ற நல்ல இமேஜ் உள்ளவரின் மகன் கஞ்சா கடத்தி விற்பதோடு, அதற்கு நியாயமும் சொன்னால் படம் பார்க்கும் ரசிகனுக்கு படம் கனெக்ட் ஆகுமா? மேலும் இப்படியான கதைகளுக்கு நியாயம் சேர்ப்பதும் வருத்தத்திற்குரியது. திரைக்கதையில் சுரத்தே இல்லை. கொம்புசீவி ரசிகர்களின் தலையையே சீவினால் என்னங்க நியாயம்?

-2/5