ஜிவி பிரகாஷுக்குப் பரிசை கொடுத்த இம்மார்டல்!
சமீபத்தில் வெளியான இம்மார்டல் படம் ஒரு ரீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது!
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் மேலும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசளித்து அசத்தினார்.