இப்போது நான் பதற்றமாக இருக்கிறேன்- ஆதித்ய வர்மா மேடையில் விக்ரம்
சமீபத்தில் நடைபெற்ற ஆதித்ய வர்மா படத்தின் ஆடியோ லாஞ்ச் அதிரிபுதிரி ஹிட். மேடையில் நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ் இருவரும் ஒருசேர பேசி அசத்தினார்கள்.
தனது தந்தை, நடிகர் விக்ரம் பற்றி துருவ் பேசுகையில், அப்பாவைப் பற்றிப் பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.” என்றார்
மேடையில் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில் , நடிகர் விக்ரம் சிரித்தபடி, “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது” என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ கூ நான் பதற்றத்தை உணரவில்லை” என்று ஒப்புக்கொண்டார் விக்ரம். இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன் என்று கூறி விக்ரம் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கான அறிகுறியைக் கொடுத்தார். ஆக ஆடியோ நிகழ்ச்சி ஹிட் ஆயிடிச்சி