அருள்நிதி மிரட்டும் ‘K13’

Get real time updates directly on you device, subscribe now.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைத் தொடர்ந்து அருள்நிதி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படத்துக்கு ‘K13’ என்று வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர். நாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.

சரி அதென்ன K13? இயக்குனர் பரத் நீலகண்டனிடமே கேட்டோம்…

“K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. இதைத்தாண்டி இந்தப் படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.

அதே சமயம் இந்தப்படம் ரசிகர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு த்ரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம்” என்றார்.

படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள்.