எழில் டைரக்‌ஷனில் காமெடி செய்யப்போகும் ஜி.வி.பிரகாஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், காமெடிப் படங்களில் கொடிகட்டிப் பறக்கும் இயக்குனர் எழில் உடன் புதுப்படம் ஒன்றில் இணைந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

பல மொழிகளில் படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

Related Posts
1 of 139

இதைத் தொடர்ந்து எழில் இயக்கும் இந்தப் புதுப்படத்தை இன்று தொடங்கியிருக்கிறார்கள். இதன் தொடக்க விழா மிகவும் எளிமையான முறையில் கோவில் ஒன்றில் நடைபெற்றது. சி. சத்யா இசையமைக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் படம் என்றாலே காமெடி ஃபார்முலா தான். அப்படித்தான் இந்தப்படமும் முழுநீள காமெடிப்படமாக தயாராகிறது. வருகிற மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.