காதல் ரீசெட் ரிப்பீட்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

காதல் ரீசெட் ரிப்பீட்- விமர்சனம்

இயக்குநர் விஜய் இயக்கிய காதல் படங்களில் மதராசப்பட்டிணம் மிக முக்கியமான காதல் படம். அதுபோல இந்தக்காதல் படம் தாக்கத்தை ஏற்படுத்தியதா?

ஹீரோ மதும்கேஷ் ஹீரோயின் ஜியாசங்கரை ஸ்காட்லாந்தில் தன் கவனிப்பில் வைத்துள்ளார். ஜியாசங்கருக்கு ஒருநாளில் நடப்பது அடுத்த 24 மணி நேரத்தில் மறந்துவிடும். அப்படியொரு நோய் அவருக்கு. அதனால் அவரை கவனமாக பாதுகாத்து வருகிறார். இவர் ஏன் ஹீரோயினை காப்பாற்றவேண்டும்? ஹீரோயினியின் முன்கதை என்ன? அவருக்கு எதனால் இப்படியொரு நோய் வந்தது? மதும்கேஷுக்கும் ஜியாசங்கருகுமான தொடர்பு எங்கிருந்து ஆரம்பமானது? என்பதற்கான எல்லாக்கேள்விகளுக்கும் படம் விடை சொல்கிறது

காதல்கொண்டேன் தனுஷ் போல அமைதியாக நடித்து ஸ்கோர் செய்ய முயன்றுள்ளார் ஹீரோ மதும்கேஷ். நாயகி ஜியாசங்கர் நல்ல அழகோடு இருக்கிறார். அவரது நடிப்பும் கவனிக்கும்படியுள்ளது. அர்ஜுன் அசோகன் ஓரளவு திருப்திகரமான நடிப்பைத்தருகிறார். எ.எம்.பாஸ்கர் உள்ளிட்ட பிற நடிகர்களும் ஒகே ரகம்

ஹாரிஸ் ஜெயராஜ் கம்பேக் கொடுப்பார் என்று பார்த்தால், நிறைய இடங்களில் இளையராஜாவின் பின்னணி இசையைத்தான் வாசித்து வைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா நல்ல விஷுவலைக்கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பணி படத்தில் மிக முக்கியமான ஒன்று

கதை விசமுள்ள ஒன்றாக இருந்தாலும் பலவீனமான திரைக்கதை படம் மீதான ஆர்வத்தை இழக்க வைக்கிறது. காதல்தோல்வி சார்ந்து ஹீரோயின் எடுக்கும் முடிவு பிற்போக்குத்தனமானது. மேக்கிங் லெவலில் கவனம் ஈர்க்கும் படம் ரைட்டிங் லெவலில் வீக்-ஆக இருக்கிறது

ரீசெட் செய்தாலும் ரிப்பீட் மோட்-க்கு இழுக்கவில்லை இந்தக்காதல்
2.25/5