மாஸ் ஆக்சன் கலந்த படம் ‘கடுவா’!

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.
வரும் ஜூலை 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.