“முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்…” – ‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினருக்கு கமல் பாராட்டு!

Get real time updates directly on you device, subscribe now.

சென்ற வாரம் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’.

கதிர், ஆனந்தி, யோகிபாபு மற்றும் பலர் நடித்த இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.

படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதிக்க சாதியினரால் எப்படியெல்லாம் தென் மாவட்டங்களில் அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது என்பதை உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இப்படத்தை திரையுலகினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என எல்லா மட்டத்திலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Posts
1 of 33

இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன், “தனது நண்பர்கள் பலரும் போன் செய்து ‘பரியேறும் பெருமாள்’ படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி.

படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்… உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்று பாராட்டினார்.