தேவா கொண்டாடிய மீசைய முறுக்கு2

சமீபத்தில் வெளியான படங்களில் ‘நல்லா கல்லா கட்டும்’ படமாக மாறியுள்ளது மீசைய முறுக்கு2. ஹிப்ஹாப் தமிழா எழுதி இயக்கி இசைத்து நடித்துள்ள இந்தப்படத்தை சுந்தர் சி குஷ்பு தம்பதி தயாரித்திருந்தனர். பலத்த போட்டியில் வெளியான இந்தப்படம் ஜென்ஸியர் மனதில் இடம் பிடித்தது. இதுவரை உலகம் முழுதும் 35 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் இன்னும் இரண்டு வாரம் தாங்கும் என்கிறது தியேட்டர் வட்டாரம். நேற்று இப்படத்தின் வெற்றியைப் படக்குழு வெகு விமர்சையாக கொண்டாடியது. பேருக்கு சக்சஸ் மீட் நடத்தாமல் நிஜமான வெற்றிவிழாவை கொண்டாடினர் படக்குழுவினர். ஹீரோ உள்பட படக்குழு மொத்தமும் நிகழ்வில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது! முத்தாய்ப்பாக தேனிசைத் தென்றல் தேவா வருகை தந்து படக்குழுவைப் பாராட்டியது தான் ஹைலட்