கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்… : தன்னை திட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த கமல்
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலை ட்விட்டரில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் கமல்.
அவரது துணிச்சல் ட்விட்டரில் மட்டுமே இருக்குமென்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, பிக்பாஸ் சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் விதமாக சென்ற வாரம் மீடியாக்களை சந்தித்த போதும் தமிழக ஆளும் கட்சி மீது ஊழல் புகார்களைச் சொல்லி பரபரப்பை கிளப்பினார்.
தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது என்று அவர் பேசிய பேச்சு தமிழக அமைச்சர்களை ”அவன், இவன்” என்று ஒருமையில் திட்டுகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டது.
அதே சமயம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் ”கமல் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது” என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் திடீரென்று நேற்று இரவில் தனது ட்விட்டரில் அரசியலுக்குள் எண்ட்ரி கொடுப்பது போன்ற தொனியில் அமைந்த தனக்கே உரிய ஸ்டைலில் அடுத்தடுத்த இரண்டு கவிதைகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
அவருடைய அந்த கவிதைகளுக்கு அர்த்தம் தெரிந்த திருமாவளவன் உள்ளிட்ட கட்சியினர் வரவேற்றாலும், பாஜகவைச் சேர்ந்த தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் கமலை கடுமையாகச் சாடினர்.
இதற்குப் பிறகு கமல் பேசவே மாட்டார். அமைதியாகி விடுவார் என்று தான் அவரது ரசிகர்கள் கூட நினைத்திருப்பார்கள். ஆனாலும் தன் மீதான அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி தரும் விதத்தில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கமல்.
இதோ அந்த அறிக்கை :

