பாடி பில்டர்களை காமெடியாக காட்டும் “கன்னா பின்னா”
சிவசுப்ரமணியன், ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் வழங்கும் புதிய படம் “கன்னா பின்னா”.
பொதுவாக பாடிபில்டர்களை சினிமாவில் அடியாள் கதா பாத்திரங்களுக்கும் வில்லன் கதாபாத்திரங்களுக்குமே பயன்படுத்தி வருவார்கள். அதிலிருந்து மாறுபட்டு முழுக்க, முழுக்க அனைத்து பாடி பில்டர்கலையும் நகைச்சுவை கதாபாத்திரங்களாக படம் முழுவதும் நடிக்க வைத்திருக்கிறோம் .
பார்ப்பதற்கு பிரமாண்டமான உடலமைப்பில் காட்சியளிக்கும் இந்த உடற்கட்டு வீரர்கள் பெரும்பாலும் குழந்தைதனமாகவும், நகைச்சுவையானவர்களாகவும் தான் இருக்கிறார்கள், அப்படி பட்டவர்களின் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருக்கிறோம்
தமிழகம் முழுவதும் இருந்து நிறைய பாடிபில்டர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழகம், மற்றும் புதுவையில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட முதலில் “அடேங்கப்பா இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா?” என்று வியந்து விட்டு பிறகு நடிப்பதே இவர்கள் தான் என்று தெரிந்துகொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
யூனிட் ஆட்கள் மட்டுமல்ல நடிக்கும் நடிகர்களும் கூட பல காட்சிகளில் நடிப்பை மீறி சிரித்து கொண்டு தான் இருந்தனர். அந்தளவுக்கு படம் முழுவதும் நகைச்சுவை இருக்கிறது.
சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு கூட தேவைப்படவில்லை, படம் யூனிட் முழுவதும் பாடிபில்டர்களை பார்த்தோ என்னவோ எந்த இடையூரும் எந்த இடத்திலிருந்தும் வரவில்லை என்று சொல்லும் இயக்குனரும் ஒரு பாடிபில்டர் தான், அதுமட்டுமல்ல படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நண்பர்கள் இருவரும் கூட பாடி பில்டர்கள்தான்.
முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் “கன்னா பின்னா ” எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வு அடைய விடாமல் சிரிக்க வைக்கும் அளவுக்கு படம் இருக்கிறது என்கிறார் இயக்குனர் தியா .
கதாநாயகியாக அஞ்சலிராவ் நடிக்க, எழுதி இயக்கி நடிக்கிறார் தியா.