ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு பாடமாக வர இருக்கும் “கருத்துகளை பதிவு செய்”

Get real time updates directly on you device, subscribe now.

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் ஆர்.பி.எம். சினிமாஸ்

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “கருத்துக்களை பதிவு செய்” என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளிவர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு பாடமாக தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.