டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகும்“வட்டம்”!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், நடிகர் சிபிராஜ் நடித்துள்ள “வட்டம்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
‘வட்டம்’ ஒரு திரில்லர் திரைப்படம். மனோ, ராமானுஜம், கௌதம் மற்றும் பாரு ஆகிய கதாப்பாத்திரங்கள் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகளும், பரபரப்பான சம்பவங்களும் தான் கதை. இந்த தொடர் சம்பவங்கள், அவர்களின் வாழ்க்கையையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும் மொத்தமாக மாற்றுகிறது.