வட போச்சே… : கீர்த்தி சுரேஷுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்

‘ஒ.கே கண்மணி’ வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
படத்துக்காக ஸ்டோரி டிஸ்கஷன், தொழில்நுட்பக் கலைஞர்கள் செலெக்ஷன் உள்ளிட்டவைகள் முடிந்து விட்டாலும் இன்னும் நடிகர், நடிகைகள் தேர்வு மட்டும் முடிந்தபாடில்லை.
முன்னதாக ஒ.கே கண்மணியை ஆரம்பித்த போது அவருடைய இயக்கத்தில் எந்த முன்னணி ஹீரோவும் நடிக்க முன்வரவில்லை. அந்த சமயத்தில் துல்கர் சல்மான் தான் நடிக்க சம்மதித்தார். படமும் ஹிட்டானதால் தனது அடுத்த படத்திலும் அந்த ஹிட் காம்பினேஷனை இதில் சேர்த்திருந்தார். கூடுதலாக கார்த்தியும். கீர்த்தி சுரேஷும் இணைகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின.
இடையில் என்ன நடந்ததோ? யார் குழப்பினார்களோ தெரியவில்லை. திடீரென்று துல்கரை தனது புதுப்படத்திலிருந்து நீக்கி விட்டார் மணிரத்னம்.
அவரின் இந்த நடவடிக்கையை கொஞ்சமும் எதிர்பார்க்காத துல்கர் அப்செட்டாகி மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சரி அதோடு நீக்கம் முடிந்தது என்று நினைத்தால் இப்போது கீர்த்தி சுரேஷையும் படத்திலிருந்து நீக்கியிருக்கிறாராம் மணிரத்னம்.
நடிக்க வந்து ஒரு படமே ரிலீசான நிலையில் மணிரத்னம் பட வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷமாக இருந்தார் கீர்த்தி. ஆனால் அந்த சந்தோஷம் ஒரு மாதம் கூட நிலைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ‘ரே’ தெலுங்கு படத்தின் நாயகியான ஷாயாமியை கமிட் செய்திருக்கிறார்.
படம் ஆரம்பிப்பதற்குள் இன்னும் எத்தனை பேரை மணிரத்னம் நீக்கப் போகிறாரோ..?
என்னாச்சு மணி சார்..?