வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும்-ராதாரவி!

Get real time updates directly on you device, subscribe now.

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். 5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது.

நடிகர் ராதாரவி கூறியதாவது..,

இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும் படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்.