மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு – “கொடுவா”!

Get real time updates directly on you device, subscribe now.

சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை 28 (2) படத்திற்கு பிறகு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “கொடுவா”. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.  

Related Posts
1 of 2

மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி  உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது.  இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு  அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் நடிக்க உடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நேற்று யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டைட்டில் டீசர் மற்றும் இன்று ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.