‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது.
தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.