நரிக்குறவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் ‘கொள்ளிடம்’

Get real time updates directly on you device, subscribe now.

nesam-murali

வெர்டிக்கல் பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் ”கொள்ளிடம்.”

இந்திய சினிமாவில் முதல் முறையாக நரிக்குறவர்களின் வாழ்க்கையை முழுமையாக பதிவு செய்திருக்கும் இப்படத்தை நேசம் முரளி நடித்து இயக்கியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக லூதியா நடிக்க, இவர்களுடன் ராசிக், வடிவுக்கரசி, ராமசந்திரன், வேல்முருகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மனித இனத்துல இருபது சதவீதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் என்பது சதவீதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம்.

அழகு குறைவா இருக்குற என்பது சதவீதம் பேர் ஒருதலையாதான் காதலிக்க முடியுது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் “இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு” நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், அந்த கொலைக்கு பேர் தான் “கொள்ளிடம்”.

இதுவே ‘கொள்ளிடம்’ படத்தின் கதைக்கரு என்கிறார் நேசம் முரளி.

டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நேசம் முரளி, ஒளிப்பதிவு – ஆர். ராஜகோபால், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத்தொகுப்பு – S.P.அஹமத்

பாடல்கள் – அண்ணாமலை, M பூதூர் K. காமராஜ், நேசம் முரளி, சண்டை பயிற்சி – M.K. முருகன்

கலை – T.M. சாமி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன் தயாரிப்பு – ராசிக், E.M. ஜபருல்லா, ரூபா ஐயப்பன், G.V. பாஸ்கர்