ஆண்களின் நட்பு வட்டத்துக்குள் பெண் நுழைந்தால் வருகிற பிரச்சனைகளைச் சொல்லும் ‘கூட்டாளி’

Get real time updates directly on you device, subscribe now.

Koottali

ஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு, பி. பெருமாள் சாமி இணைந்து, மிக பிரம்மாண்டமான பொருட்செலவில், பல பிரமிக்கதக்க காட்சியமைப்புகளுடன் தயாரிப்பில் உள்ள “கூட்டாளி” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

சென்னையில் துவங்கி, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களில் பரபரப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்றி்ருக்கிறது.

துணை, இணை இயக்குனராகப் பல திரைப்படங்களில் பணியாற்றிய எஸ்.கே மதி, இத்திரைப்படத்தின் மூலம் கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குனராகிறார்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகும், இத்திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும், கிரிஷா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கல்யாண், அருள்தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி, கலைஅரசன், அன்புராஜ், ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நால்வர் நண்பர்களாக, அவர்களோடு ஒரு பெண்ணும் தோழியாகிறார். வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளையும், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்புடனும், படமாக்கி இருக்கிறார்கள்.

ஒளிபதிவாளர் சுரேஷ் நடராஜன், படத்தொகுப்பு பிரஷாந்த் தமிழ்மணி, நடன அமைப்பு கல்யாண், ரமேஷ், மற்றும் கலை சிவக்குமார், சண்டைகாட்சி அமைப்பு ராம்போ விமல்,தயாரிப்பு நிர்வாகம்.ஆர்.கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்திருக்கிறார்.