தோட்டா தெறிக்க தெறிக்க… வேட்டு வெடிக்க வெடிக்க… வர்றான் ‘தெறி’

Get real time updates directly on you device, subscribe now.

theri2

விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. இன்னும் நான்கு தினங்களில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதனால் உற்சாகத்தில் இருப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் தான். அதற்கும் காரணம் உண்டு.

இது அவருடைய இசையமைப்பில் வெளிவரும் 50-வது என்பது தான் அந்த உற்சாகத்துக்கு காரணம். அந்த உற்சாகத்துடனே வழக்கத்தை விட ‘தெறி’ பாடல்களுக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

Related Posts
1 of 83

படத்தில் இடம்பெறும் செல்லக்குட்டி என்ற பாடலின் வரியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ஜி.வி.பிரகாஷ் தற்போது இன்னொரு பாடலின் தொடக்க வரிகளையும் வெளியிட்டுள்ளார்.

”தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டு வெடிக்க வெடிக்க…
வர்றான் தெறி…”

எனத் தொடங்கும் இந்தப் பாடல் தான் படத்தில் விஜய்யின் அறிமுகப்பாடலாக தெறிக்க விடப்படும் என்று விஜய் ரசிகர்களால் நம்பப்படுகிறது.

படமும் அப்படியே இருக்கட்டும்!