மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’!
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே !ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர்.
ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தன்னுடைய ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் நடிகர் மணிகண்டன். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் வினோத் குமார் மற்றும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியுடன் இந்தப் படத்தில் மணிகண்டன் இணைந்துள்ளார்.