நாளைக்கே நான் அரசியல்வாதியாக வரலாம்! : விழா மேடையை அதிர வைத்த புதுமுக நாயகி!
முதல் படமே ரிலீசாகவில்லை. அதற்குள் நான் அரசியல் வாதியாகக் கூட ஆகலாம், அல்லது கிரிமினல் லாயர் ஆகலாம், அல்லது உங்களைப் போல ஜர்னலிஸ்ட்டாக ஆகியிருக்கலாம் என்று அதிரடியாகப் பேசி புருவம் உயர்த்த வைத்தார் குரங்கு பொம்மை நாயகி ”டெல்னா டேவிஸ்.”
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டெல்னா டேவிஸ் ”எல்லாருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன்.
நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத்தான். எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன்.
சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப்போல ஒரு ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நான் எப்படி ஆனாலும் நான் குரங்கு பொம்மை கதாநாயகி என்று தான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன்.
அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை குரங்கு பொம்மை வாங்கித்தரும் என்றார், டெல்னா டேவிஸ்.
முதல் பட மேடையிலேயே இவ்வளவு போல்டாகப் பேசிய ஹீரோயினை இதுவரை யாரும் பார்த்ததில்லை என்கிற குறையைப் போக்கி விட்டார் டெல்னா டேவிஸ்.