ஹங்கேரியில் உருவானது‘கள்வன்’படத்தின் பின்னணி இசை!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார்.

Related Posts
1 of 24

இது குறித்து இசையமைப்பாளர் ரேவா கூறும்போது, “அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு சார், பிவி ஷங்கர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா சார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது. இந்தப் படத்தின் கதை மூலம் இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.