‘சிக்ஸ்பேக்’ ஹீரோவாகிறார் ராகவா லாரன்ஸ் தம்பி!
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘காஞ்சனா – 2’ படத்தில் இடம் பெற்ற ”சில்லாட்ட பில்லாட்ட” என்ற பாடலில் ராகவா லாரன்ஸ்வுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாகிறார்.
நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் ராகவாலாரன்ஸ் அவர்களே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார்.
நடனம் மட்டும் இல்லாமல் ‘சிக்ஸ்பேக்’ உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.
படத்தின் டைட்டில் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ராகவா லாரன்ஸ்.