பத்து நாட்களில் 130 கோடியை அள்ளிய ‘காஞ்சனா 3’
ஏப்ரல் 19 ம் தேதி வெளியான ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்களைப் போல இருந்தாலும் காமெடி பிளஸ் திகில் கலந்து படத்தை கொடுத்த விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
தமிழகம் முழுக்க சுமார் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சனா 2 படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ராகவா லாரன்ஸின் இந்த காஞ்சனா 3 படம் 100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்துள்ளது. ஒரு மாநில மொழிப்படம் இந்தளவு வசூல் வேட்டையாடிக் கொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயமாக கோடம்பாக்கத்தில் பார்க்கப்படுகிறது.